சாலை வசதி கேட்டு மறியல் போராட்டம்
செங்கம் அருகே சாலை வசதி கேட்டு மறியல் போராட்டம்;
செங்கம்
செங்கத்தை அடுத்த பரமனந்தல் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர், திருவள்ளுவர் நகர், பாரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
ஆனால் சாலை வசதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் சாலை வசதி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று பரமனந்தல் -குப்பநத்தம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இ
தனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.