3 நாட்கள் மலையில் தங்கி வழிபட அனுமதி கேட்டு போராட்டம்

சதுரகிரியில் நவராத்திரி திருவிழாவின் போது 3 நாட்கள் மலையில் தங்கி வழிபட அனுமதி கேட்டு ெபாதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update:2023-10-11 01:23 IST

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி காப்பு கட்டுதலுடன் ெதாடங்குகிறது. இந்த விழா 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிைலயில் விழா நடைபெறும் 10 நாட்களும் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்யவும், கடைசி 3 நாட்கள் இரவில் தங்கி திருவிழாவை நடத்தவும் கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி தர வேண்டும். ஒரு ஊருக்கு 50 பேர் வீதம் மொத்தம் 7 ஊரு மக்கள் சேர்ந்து 350 பேர் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுந்தரபாண்டியம் ஏழூர் சாலியர் சமூகத்தினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

வனத்துறை சார்பில் 10 நாள் நடைபெறும் திருவிழாவில் கடைசி 3 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது எனவும், இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.இதுகுறித்து நேற்றுமுன்தினம் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மேற்கண்ட ேகாரிக்கைகளை வலியுறுத்தி சுந்தரபாண்டியத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்