ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-16 17:08 GMT


மருத்துவர் காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன் கிடைக்கும் வகையில் நடைமுறை படுத்தி சந்தா தொகையை ரூ.350-ஆக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். செயலாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்