வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் தலைமை தாங்கினார். விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 22 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.