தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2022-09-14 00:24 IST


நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நவீன அரிசி ஆலைகள்

நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து தமிழக நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூட்டுறவு துறையினரை மண்டல மேலாளர் நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்வதை திரும்ப பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஒப்பந்த முறையில் சுமை தூக்கும் தொழிலாளர்களை நியமனத்தை உடனே நிறுத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு காலைமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டம்

இதன்படி நேற்று திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளையராஜா, மண்டல துணை செயலாளர்கள் ஜெயகுமார், அன்பழகன், கனகராஜ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்