நாமக்கல்லில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-17 18:45 GMT

நாமக்கல்:

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். அப்போது மின்வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப கோரியும், 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பயன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் மின்வாரிய அலுவலர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் பொறியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தபாபு, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகி சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்