கிருஷ்ணகிரியில்அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்வராசு, மாநிலக்குழு உறுப்பினர் லெனின், மாவட்ட துணைத்தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வரதராஜி, வெங்கடாசலம், கல்பனா முருகன், ராஜா, மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் விவசாயம், விவசாயம் சார்ந்த வேலைகளில் ஒரே மாதிரியான சட்டக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்தி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாகவும், சட்டக்கூலியாக 600 ரூபாய் வழங்க வேண்டும். 60 வயது முடிவடைந்த அனைத்து விவசாய, விவசாய தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.