தர்மபுரி:
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் வணங்காமுடி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வேடியப்பன், நிர்வாகிகள் குப்புசாமி, மணி, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி ேபசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.