நத்தத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நத்தத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-27 14:48 GMT

நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டக்கிளை சங்க தலைவர் பச்சமுத்து தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சுகந்தி, பேரூராட்சி சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நில அளவை வட்டார நிர்வாகி விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டக்கிளை நிர்வாகி சக்திபொன்னன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்