பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்ககோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update:2022-11-21 00:15 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு குறைபாடுகளை களைவது, கூடுதல் டாக்டர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி பா.ஜ.க. மண்டல தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். பா.ம.க. ஒன்றிய செயலாளர் கார்த்திக், அ.தி.மு.க. கிளை செயலாளர் தொல்காப்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்