ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பாக மத்திய அரசு கொடுத்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக கோரிக்கை முழங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் தலைமையில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உடனடியாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்ககோரி கோஷமிட்டனர்.