நீடாமங்கலத்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் காத்திருப்பு போராட்டம்

ஒன்றியக்குழு தலைவரை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி நீடாமங்கலத்தில் ஊராட்சி தலைவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-07-16 23:47 IST

ஒன்றியக்குழு தலைவரை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி நீடாமங்கலத்தில் ஊராட்சி தலைவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க.-வை சேர்ந்த சோ.செந்தமிழ்ச்செல்வன் உள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது அறையில் இன்று  பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது கிராம ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றியக்குழு தலைவர் அறையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் தகாத வார்த்தைகளால் ஒன்றியக்குழு தலைவரை திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஒன்றியக்குழுத்தலைவர், நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவரை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக்கோரி ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.இதனால் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்