மகளிர் காங்கிரஸ் ஒப்பாரி போராட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஒப்பாரி போராட்டம் நடந்தது.

Update: 2022-07-08 17:37 GMT

பரமக்குடி, 

பரமக்குடி நகராட்சி பகுதி எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் ராமநாதபுரம் மாவட்ட மகளிர்காங்கிரஸ் கட்சி சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பாடை கட்டி ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடந்தது. பரமக்குடி நகர் காங்கிரஸ் தலைவர் அகமது கபீர் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, மனித உரிமைப் பிரிவு மாவட்ட தலைவர் பசும்பொன் செய்யது அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது கியாஸ் சிலிண்டரை பாடைகட்டி தூக்கிவந்து சாலையில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் கோபால், மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதண்ட ராமன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம், மாநில மகளிர் காங்கிரஸ் செயலாளர் பெமிலா ஆகியோர் பேசினர். இதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மகாதேவன், ராமச்சந்திரன், நாகராஜன், குப்பு, சந்திரன், சங்கரன், ஜெபமாலை மாணிக்கம், லட்சுமி நாராயணன், ராமதாஸ், நாகேஸ்வரன் உள்பட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்