பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசை விடுதலை செய்யக்கோரி பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்
நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக போராடிய பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராசிபுரத்தில் உள்ள புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ், மாநில மாணவரணி செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராசிபுரம் நகர செயலாளர் பாரத், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் வடிவேல், நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் சதீஷ் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அன்புமணி ராமதாசை விடுதலை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
திருச்செங்கோடு, பரமத்திவேலூர்
நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில உழவு பேரியக்க தலைவர் பொன் ரமேஷ், மாவட்ட அமைப்பு தலைவர் செந்தில், திருச்செங்கோடு நகர செயலாளர் பூக்கடை சுரேஷ் சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்டத் துணைச்செயலாளர் கோடீஸ்வரன், குமாரபாளையம் நகர செயலாளர் கோவிந்தன், செந்தில் பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் ராமசாமி உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அன்புமணி ராமதாசை விடுதலை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
பரமத்திவேலூரில் உள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் பொன் ரமேஷ், மாவட்ட தலைவர் தினேஷ்குமார், வேலூர் நகர செயலாளர் ஜெய்கணேஷ், நகர தலைவர் விஜி, பிரதாப் மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் முன்னிலைய வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டு அன்புமணி ராமதாசை விடுதலை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம்
இதேபோல் பள்ளிபாளையம் பஸ் நிலைய பகுதியில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பு செயலாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மூர்த்தி, கொள்கை விளக்க செயலாளர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், பழனிச்சாமி, மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி முருகன், சேகர், ஒன்றிய தலைவர் ஜெயமுருகன் ஒன்றிய செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் நகர தலைவர் ராஜா நன்றி கூறினார்.