பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-05-24 22:13 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவேங்கடம் தாலுகா மலையான்குளம் கிராமத்தில் இயங்கி வந்து மூடப்பட்ட தனியார் மில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை மற்றும் தொடக்க வேளாண்மை வங்கி மூலம் பயிர் கடன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேரடி திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கருத்தபாண்டியன், சந்திரசேகர், அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில துணைத்தலைவர்கள் ஐயம்பெருமாள், சேது அரிகரன், மாவட்ட துணைத்தலைவர் பால்நேரு, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சாகுல்ஹமீது, மாவட்ட விவசாய சங்க தலைவர் மதிராஜ், மாவட்ட இணைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். திருவேங்கடம் நகர செயலாளர் மாரிக்கனி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பாக்கியம், குருவிகுளம் ஒன்றிய தலைவர் நடராஜன், மேலநீலிதநல்லூர் இளைஞரணி செயலாளர் வெங்கடேஷ் மற்றும் மில் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்