பள்ளிக்கூடத்திற்கு சென்று மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் திட்டம்
பள்ளிக்கூடத்திற்கு சென்று மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை,
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் நூலக நண்பர்கள் திட்டத்தில் நூலக தன்னார்வலரான எழுத்தாளர் ஈஸ்வரனின் ஏற்பாட்டில் சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக இணைத்து புத்தகங்களை படிக்கும் பள்ளிக்கே சென்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ஜான் சாமுவேல் தலைமை தாங்கினார்.
மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் உறுப்பினர் அடையாள அட்டைகளையும், புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நூல் சரி பார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், நூலகர்கள் முத்துக்குமார், கனகராஜன், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.