பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி; அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு மனுக்களை பெற்றார்.

Update: 2022-11-26 14:32 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் கீழ்கச்சராபட்டு, மேல்கச்சிராபட்டு, மெய்யூர், நாச்சானந்தல் மற்றும் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர் பகுதிகளில் உள்ள பொது மக்களின் குறைகள் குறித்து நேரடியாக சென்று மனுக்களை பெறும் நிகழ்ச்சி அந்தந்த கிராமங்களில் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அண்ணாதுரை எம்.பி., கிரி எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் வீரபிரதாப்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தகுதியானது என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் சரண்யாதேவி, மாநில கைப்பந்து சங்க துணைத்தலைவர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்