கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-10-17 19:01 GMT

அன்னவாசல்:

அன்னவாசலில் கிரிக்கெட் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் அன்னவாசல், இலுப்பூர், கீரனூர், குமரமலை ஒடுக்கூர் உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை குமரமலை அணியும், 2-வது பரிசை திருவேங்கைவாசல் அணியும், 3-வது பரிசை கண்ணாரப்பட்டி அணியும், 4-வது பரிசை அன்னவாசல் கோல்டன் நகர் அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள், கோப்பைகள் ரொக்கபணம் வழங்கப்பட்டன. இந்த போட்டியை அன்னவாசல் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கோல்டன் நகர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்