பேச்சு, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
பேச்சு, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர போலீஸ் சார்பில், 'மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு' என்ற தலைப்பின் கீழ் தமிழ், ஆங்கில கட்டுரைப்போட்டியும், 'காவல் பணிகள்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும் நடைபெற்றது. திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் 70 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.