அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு பரிசு

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு வழங்கினார்.

Update: 2023-01-25 18:45 GMT

ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் துறையில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளில் பிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500-ம், 2-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500-ம், 3-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம், 4 முதல் 10-வது வரை உள்ள இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் வழங்கப்படுகிறது. அதன்படி 2022-ம் ஆண்டில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த துத்துக்குடி மாவட்ட போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி பரிசுத் தொகையை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மயில்குமார், உதவியாளர் அனிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்