வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

ஆதிரெங்கம் ஊராட்சியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-11-19 18:49 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)சிவக்குமார், ஆணையர் விஜயகுமார் ஆகியோர் அறிவுறுத்தல்படியும், ஒன்றிய தலைவர் பாஸ்கர், மற்றும் துணை தலைவர் ராமகிருஷ்ணன், ஆகியோர் வழிகாட்டுதல்படி ஆதிரெங்கம் ஊராட்சியில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஓட்டப்பந்தயத்தை இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பாக்கியராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக விழிப்புணர்வு பேரணி ஊராட்சி அலுவலகத்தில் தொடங்கி நடுநிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கெண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், துணை தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், வார்டு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் இளந்திரையன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்