தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3-ந் தேதி நடக்கிறது.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனத்துக்கு 12-ம் வகுப்பு கல்வித்தகுதி உடைய 18 வயது முதல் 20 வயது பெண்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.
வருகிற 3-ந்தேதி வேலூரில் உள்ள ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அந்த நிறுவனம் சார்பில் தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
எனவே தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் முகாமுக்கு காலை 10 மணி அளவில் சென்று கலந்து கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.