விளாத்திகுளத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விளாத்திகுளத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

Update: 2022-10-09 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் 18 முதல் 45 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான மத்திய அரசின் பயிற்சியுடன் கூடிய வட்டார அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் விளாத்திகுளம் மற்றும் புதூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பட்டதாரிகள், இளம்பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு நேர்காணலின் அடிப்படையில் வேலை வாய்ப்பினை பெற்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி திட்ட அலுவலர் பிரபாகர், வட்டார இயக்க மேலாளர் அருள் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்