புழல் சிறையில் கைதி திடீர் சாவு

சிறையில் இருந்த கைதி தனது அறையில் இருந்து வெளியே வந்தபோது திடீரென கால் தடுக்கி கீழே விழுந்து இறந்தார்.;

Update:2022-07-25 12:32 IST

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் டாக்டர் அப்துல் கலாம் தெருவைச் சேர்ந்தவர் தரணி ராஜன் என்ற பாண்டியன்(வயது 52). இவர், நில மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் கடந்த 22-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

நேற்று இவர், சிறையில் உள்ள தனது அறையில் இருந்து வெளியே வந்தபோது திடீரென கால் தடுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை சிறை போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கைதி தரணிராஜன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணிராஜன், கால் தவறி கீழே விழுந்துதான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்