பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்ட ஆலோசனை கூட்டம்
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.;
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்ட உதவி இயக்குனர் கோவிந்தராஜன் கலந்து கொண்டு பயனாளிகளிடம், வீடு கட்டும் பணிகளை தொடங்கும்படி அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், உதவி பொறியாளர் பூரணசந்திரன், மேற்பார்வையாளர் அமலா ராணி ஊராட்சிமன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சி செயலாளர் சோழராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.