தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-20 18:05 GMT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் வழங்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உயர்கல்வி ஒதுக்கீடு, மூவலூர் ராமாமிர்தம் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைளை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்