ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நெல்லை மாவட்டத்தில் நேற்று நெல்லை, பாளையங்கோட்டை நகர், பாளையங்கோட்டை புறநகர், மானூர், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, அம்பை, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட 11 வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு மாத இறுதி வேலை நாளில் ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை டவுன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சுந்தர் ஜெப செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ் சாமுவேல் ஜெபத்துரை, வில்சன் செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.