ரூ.60 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி

ரூ.60 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி நடந்தது.

Update: 2023-05-03 19:15 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து வெள்ளத்திடல், வாணியத்தெரு, இந்திராநகர் பகுதிகளில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான இடங்களையும், திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடங்களையும் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகமது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரிதாவுதீன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்