பலே பாதிரியார்...! லேப்டாப்பில் சிக்கிய சென்னை பெண்கள் உட்பட 80 இளம்பெண்களின் ஆபாச வீடியோ...!

தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.;

Update:2023-03-18 12:37 IST

கன்னியாகுமரி

கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பாதிரியார் ஒருவரின் காதல் லீலைகள் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார்.

தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.

மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன.

இதனிடையே கடந்த 11ஆம் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி குமரி மாவட்ட போலீஸ் சூப்புரெண்டை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்ததுடன் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும் பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்போதைக்கு 10-க்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் மிக, மிக நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர்மீதான புகார்கள் இனியும் அதிகமாகும் என்கிறார்கள். அதேசமயம், இதுவரை வெளியாகி உள்ள வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஆகியவைகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பணியும் துரிதமாக தொடங்கி உள்ளது.

இந்நிலையில் பாதிரியாருடன் நிர்வாணமாக உள்ள ஒரு பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணத்தையும் அவரே நடத்தி வைத்துள்ளார்.அந்த பெண்ணின் படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் எஸ்.பி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிரியாரிடம் ஏமாந்த பெண்கள், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் செய்யலாம், அவர்களது விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசாரிடம் சிக்கிய பாதிரியாரின் லேப் டாப்பை ஆய்வு செய்த போது சுமார் 80க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, பாதிரியார் ஏராளமான பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே, தற்போது தனிப்படை போலீசார் நெருங்கியதால், தலைமறைவாக உள்ள பாதிரியார் பெனடிக்ட் சரண் அடைய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில், 'பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். ஆன்லைன் மூலமும் புகாரை அனுப்பி வைக்கலாம். பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் எங்கிருந்து பரப்பப்பட்டு வருகிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்