மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி பூசாரி பலி

மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பூசாரி உயிரிழந்தார்.

Update: 2022-06-14 20:35 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 40). இவர் பெரம்பலூரை அடுத்த கோனோரிபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். மாரிமுத்துவின் நண்பர் அதே ஊரை சேர்ந்த விஜயகுமார்(25). நேற்று முன்தினம் இரவு விஜயகுமாரும், மாரிமுத்துவும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்ட, பின்னால் மாரிமுத்து அமர்ந்திருந்தார். காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடை எதிரே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த விஜயகுமார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்