வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2022-08-14 18:40 GMT

நொய்யல், மரவாபாளையம், குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், நல்லிக்கோவில், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், பேச்சிப்பாறை, முனி நாதபுரம், நடையனூர், கொங்கு நகர்சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லி உள்பட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி ரூ.180- க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.250-க்கும், முல்லைப் பூ ரூ.850-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.750-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.140- க்கும், அரளி ரூ.140-க்கும், ரோஜா ரூ.200- முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலை‌ வீழ்ச்சி அடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்