காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.

ஜோலார்பேட்டை அருகே காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.

Update: 2023-05-12 18:00 GMT

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி ஊராட்சி காமராஜபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டிட வளாகத்திற்கு சொந்தமாக 24 சென்ட் காலியிடம் உள்ளது. இதுபோன்ற காலியாக உள்ள இடங்களில் உண்ணக்கூடிய காய்கறி மற்றும் பழ வகைகள் அடங்கிய தோட்டம் அமைக்க கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஏற்கனவே அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் குழந்ைதகளுக்கு பசுமையான காய்கறிகள் அதன் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடனுக்குடன் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காமராஜபுரத்தில் உள்ள அங்கன்வாடி மைய வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பல்வேறு காய்கறிகளின் விதைகள் தூவப்பட்டு நாற்றங்கால் நடப்பட்டது. அதன் பிறகு காய்கறி தோட்டம் அமைக்கப்பட்ட பகுதியின் அருகே மரக்கன்றுகளை கலெக்டர் நட்டார்.

நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்