தூக்கில் பிணமாக தொங்கிய கர்ப்பிணி
வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் கர்ப்பிணி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது இறப்புக்கான காரணம் என்ன? என்று ோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் கர்ப்பிணி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது இறப்புக்கான காரணம் என்ன? என்று ோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 மாத கர்ப்பிணி
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹல்லி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவருடைய மனைவி மரிய ஜெனிபர்(வயது 30). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு(2021) திருமணமாகி உள்ளது. தற்போது மரியஜெனிபர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று முன்தினம் காலையில் மரியஜெனிபர் தனியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
இதற்கிடைேய மரியஜெனிபரின் கணவர் பிரதீப் தனது மனைவியை காணவில்லை என பெங்களூரு புலிகேசி நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசில் கணவர் புகார்
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் செல்போன் டவர் சிக்னல் மரியஜெனிபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அந்த எண் வேளாங்கண்ணியில் இருப்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து பெங்களூரு போலீசார் நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணிக்கு வந்து, பெங்களூரை சேர்ந்த மரியஜெனிபர் என்பவரை காணவில்லை என்றும், அவர் இந்த பகுதியில் இருப்பதாகவும் வேளாங்கண்ணி போலீசாரிடம் தெரிவித்தனர்.
தூக்கில் பிணமாக தொங்கினார்
இந்த நிலையில் நேற்று காலையில் மரியஜெனிபர் தங்கியிருந்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள், வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசாரும், பெங்களூரூ போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மரிய ஜெனிபர் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
போலீசார் விசாரணை
பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மரிய ஜெனிபர் இறப்புக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரிய ஜெனிபருக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகூட முடியாததால் நாகை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.