திட்டக்குடி அருகே தூக்கில் கர்ப்பிணி பிணம் போலீசார் விசாரணை

திட்டக்குடி அருகே தூக்கில் கர்ப்பிணி பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-20 17:40 GMT

ராமநத்தம், 

காதல் திருமணம்

திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன். இவருடைய மகள் சத்யா (வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் கணபதி (32) என்பவரும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். சத்யா 3 மாத கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணபதிக்கும், சத்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சத்யாவிடம், கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தூக்கில் பிணம்

இந்த நிலையில் நேற்று இரவு, சத்யா வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிராஜ் மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சத்யாவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யா சாவுக்கான காரணம் குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்