இறால் வளர்ப்போர் கூட்டம்
முத்துப்பேட்டையில், 7-ந் தேதி இறால் வளர்ப்போர் கூட்டம் நடக்கிறது.
திருவாரூர்;
திருவாரூர் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சாா்பில் இறால் வளர்ப்பில் வளர்ச்சி தொழில்நுட்பங்கள் மற்றும் நிகழ்கால பிரச்சினைகள் குறித்து இறால் வளர்ப்போர் கூட்டம் முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி நடக்கிறது. கூட்டத்திற்கு இறால் வளர்ப்பவர்களிடையே சமீபத்திய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சந்தையில் கிடைக்கும் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை காட்சிபடுத்துதல் போன்றவை குறித்து பேசப்பட உள்ளது.எனவே திருவாரூர் மாவட்ட இறால் வளர்ப்போர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.