வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பி.செந்தில்குமார் தலைமையில் பிரசாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் மாதம் 4-ந் தேதி சென்னையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரிடம் பெருந்திரள் முறையீடு அளிக்கும் போராட்டம் குறித்து பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாநில தலைவர் எஸ். ரமேஷ், மாநில செயலாளர் எஸ்.ராஜசேகர், வி.செந்தில் குமார், மாவட்ட தலைவர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பிரசார இயக்கம் குறித்து விளக்கி கூறினர்.