வடுவூர் வடபாதி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மூலவர் கைலாசநாதர், வடிவழகி அம்மன், நந்தியம் பெருமாள் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பரவாக்கோட்டை, பாமணி நாகநாதசாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது நந்தி பகவானுக்கும், மூலநாதர் -அபயாம்பிகைக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
அதேபோல் திருவீழிமிழலை வீழிநாத சுவாமி கோவில், கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவில், சற்குணேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில், குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ருசம்ஹார மூர்த்தி கோவில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.