சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

விழுப்புரம் பகுதி சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-13 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகை நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 6.30 மணியளவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் உற்சவர், கோவிலை வலம் வந்தார்.இதில் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர், கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர், பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் உள்ளிட்ட விழுப்புரம் பகுதியில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்