சோம வார பிரதோஷ விழா
திருவேங்கடம் பகுதியில் கோவில்களில் சோம வார பிரதோஷ விழா நடந்தது
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி பஞ்சாயத்து மகாதேவர்பட்டி மரத்தோனீஸ்வரர், திருவேங்கடம் அக்ரஹாரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர், குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.