ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

புதுச்சத்திரத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-04-25 18:45 GMT

புதுச்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி புதுச்சத்திரம் வட்டார வள மையத்தில் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் அம்ரு நிஷா, வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியம், சந்திரசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் வருகிற கல்வி ஆண்டின் முதல் பருவம் சார்ந்த எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் புதியதாக சேர்க்கப்பட்ட பாடக்கருத்துக்கள் செயல்பாடுகள் மூலம் கருத்தாளர்களால் விளக்கப்பட்டது. பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன், மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முதல் நாளான நேற்று தமிழ் பாடத்திற்கான பயிற்சியில் 79 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர்கள் லதா, கண்ணன், திவ்யா மற்றும் மேரி ஹெலன் ஆகியோர் செயல்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்