குடிநீர் தரம் கண்டறியும் பயிற்சி

தூய்மையான குடிநீர் பரிசோதனை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. வ

Update: 2022-12-21 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர், ஊராட்சி செயலாளர்களுக்கு தூய்மையான குடிநீர் பரிசோதனை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் கண்ணன் கலந்துகொண்டு ஊராட்சிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரம், அளவு மற்றும் அதில் உள்ள சத்துக்களின் அளவுகளை கருவிகள் மூலம் தெரிந்து கொள்வதற்கான செய்முறை பயிற்சி அளித்தார். பயிற்சியில் திருவாடானை யூனியனை சேர்ந்த 47 ஊராட்சி மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு பொறுப் பாளர்கள், ஊராட்சி செயலாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் அனைவருக்கும் குடிநீர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அய்யப்பன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜென்சிராணி, வன்மிகநாதன், சுப்பிரமணியன், முருகன், ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் ஷீலா மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வரத்தினம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்