மாணவ-மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி

மாணவ-மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

Update: 2022-10-01 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன்கணபதி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் நாகராஜன் ரத்ததானம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பேசினார். பயிற்றுநர்கள் ரபேக்கா மற்றும் ரத்னமணி ஆகியோரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கருத்துரையாற்றினர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் முதலாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி நந்தினி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்