தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்பிற்கு வருகிற 13-ந் தேதியும், பிளஸ்-1 வகுப்பிற்கு 14-ந்தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பிற்கான செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 325 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
முதல் நாளான நேற்று இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் என பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது. தேர்வு மையங்களை கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த தேர்வு வருகிற 9-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.