தேவகோட்டை,
தேவகோட்ட துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை தேவகோட்டை மின் உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.