பலத்த சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்தன
பலத்த சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.
உப்பிடமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். இந்தநிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்காக குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், உப்பிடங்கலம் அருகே உள்ள சின்னகவுண்டனூரில் நேற்று மாலை நேரத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றுக்கு 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனையடுத்து உடனடியாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் ஓட்டு வீடுகள், ஆஸ்பிட்டாஸ் கூரை வேய்ந்த வீடுகள் பலவும் மின் கம்பங்கள் சாய்ந்ததில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை அங்கு வந்து சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து மின் இணைப்பு வழங்கினர்.