இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-07-04 18:11 GMT

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இன்று மின்நிறுத்தம்

தேவகோட்டை துணை கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் வேப்பங்குளம் மின்பாதையில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாகாடி, பாவனக்கோட்டை, மோயன்வயல், செங்கர்கோவில், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் அறிவித்து ள்ளார்.

காளையார் கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக காளையார்கோவில், சொர்ணவள்ளி நகர், பள்ளிதம்மம், புலியடிதம்மம், சருகனி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடி, கள்ளத்தி, கருங்காளி, கருமந்தகுடி, பெரியகண்ணனுர், ஒய்யவந்தான், நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அரசனூர்

அரசனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, படமாத்தூர் பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.இத்தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, உ.சிறுவயல் ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இடையமேலூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை தமராக்கி, குமாரப்பட்டி, காராம்போடை கண்டாங்கிபட்டி மீனாட்சிபுரம், முடிகண்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்