வடகாடு, கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில், ஆலங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

வடகாடு, கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில், ஆலங்குடி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

Update: 2022-10-27 18:54 GMT

வடகாடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வடகாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி, சோத்துப்பாலை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன்பட்டி, மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சி பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, பகட்டுவான் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, ஆத்தியடி பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம் பட்டி ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர்.

குளத்தூர், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.ஜி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் நிறுத்தம், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

பாச்சிக்கோட்டை,வடகாடு, மழையூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே.ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான் விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி, மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தங்கரைவிடுதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஆலங்குடி உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்