ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை மின்தடை
ஜெயங்கொண்டம், தா.பழூரில் நாளை (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் தழுதாழைமேடு துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோவில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைக்கட்டு, வடக்கு/ தெற்கு ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணைமின் நிலையங்கள் அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.