குடவாசல் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் உஷா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-குடவாசல் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.