நாளை மின்நிறுத்தம்

தரங்கம்பாடி, செம்பனார்கோவில், திருவெண்காடு பகுதிகளில்நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-10-25 18:45 GMT

சீர்காழி:

திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் திருவெண்காடு, மேலையூர், மணிக்கிராமம், பூம்புகார், பெருந்தோட்டம், நாங்கூர், திருநகரி, திருவாலி, மேலச்சாலை, மங்கைமடம், அண்ணன்பெருமாள் கோவில் மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாாியத்தினர் தெரிவித்துள்ளனர்.பொறையாறு, மற்றும் கிடாரங்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பொறையாறு, தரங்கம்பாடி, சாத்தங்குடி, திருக்கடையூர், பிள்ளைப்பெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், சந்திரப்பாடி குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்னப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டிசாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கும் நாளை(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இதேபோல கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், பரசலூர், ஆக்கூர், மடப்புரம் காலகஸ்திநாதபுரம், கருவி, செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, முடிகண்டநல்லூர் மற்றும் அதனை சார்ந்த கிராமங்களிலும் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5. மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவிசெயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர்

தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்